பதுளை – ஹாலிஎல சார்ணியா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர். (நி)