கொழும்பில் இடம்பெறவுள்ள முஸ்லிம் சமய சமாதான மாநாட்டில் பங்கேற்குமாறு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள பற்றிய சந்தேகங்களையும் பிழையான அபிப்பிராயங்களையும் போக்குவதற்கான சமாதான மாநாடு இம் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்கணவில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் பௌத்த உயர் பீடங்களைச் சேர்ந்த சமய தலைவர்கள், இந்து, கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்பர் என முஸ்லிம் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இந்த சமாதான மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அஸ்கிரிய, மல்வத்த உயர் பௌத்த பீட மாநாயக்கர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ம்மில் மற்றும் இன ஐக்கியத்திற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அப்துல் காதர் மௌலானா ஆகியோர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுக்குச் சென்று மா நாயக்கர் தேரர்களைச் சந்தித்தனர். (நி)