ரஞ்சனிடம் விளக்கம் கோரிய ரணில்

மகா சங்கத்தினர் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூல கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

உங்களால் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கும், கட்சியின் கொள்ளைக்கும் பொறுத்தமற்றது.

பாரம்பரியமாகவே பௌத்த விகாரைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டு விகாரைகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

களனி ரஜமகா விகாரை, கங்காராம விகாரை உள்ளிட்ட பிரபல்யமான விகாரைகள் விகாராதிபதிகளினதும், ஏனைய பிக்குமார்களினதும், கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அனைத்து விதமான வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியைக் கொண்டுள்ள நிலையில், உங்களது கருத்துக்களை, நாட்டின் பிரதமர் என்ற ரீதியிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் நிராகரிக்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயங்களில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அண்மையில் பிக்குக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.

குறிப்பாக ‘தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத்திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்கள் எனவும், அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே, இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுகிறார்கள் என, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!