சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித

வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால், வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக, நாம் அங்கிருந்து வெளியேறினோம்.
அவ்வாறு வெளியேறியதன் மூலம், தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர்.
ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை.

இன்று திறக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அதனை திறக்க அனுமதிக்கப் போவதில்லை எனவும், வைத்தியர்கள் சிலர் கூறினர்அதன் காரணமாகவே வைத்தியசாலை திறக்க காலதாமதம் ஆகியது.மாறாக எனது தனிப்பட்ட தாமதம் இதற்கு காரணம் அல்ல.மேலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை சகல நவீன வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்த பிரதேச மக்கள் சிறந்த பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

நவீன் திஸாநயக்கவின் தந்தை இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பு செய்தார், நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஆளுமை அவரிடம் காணப்பட்டது, அது பிறப்பிலிருந்தே அவருக்கு கிடைத்திருந்தது, நாட்டை கட்டியெழுப்பக் கூடிய எதிர்கால சிந்தனை மிக்க ஒரு அரசியல் தலைவராவார், யுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார், வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், அவ்வாறான அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!