டோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

இந்தியாவுக்கு 2 உலகக் கிண்ணம் (2007-20 ஓவர்கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த அவர் தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார்.

38 வயதான டோனி உலக கிண்ண போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கிண்ணத்தின்போது போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ

அதாவது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓரங்கட்டுவது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது. 6-வது மற்றும் 7-வது வரிசையில் விளையாடும் அவர் பந்துகளை அடிப்பதில் திணறி வருவதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நெருக்கடி காரணமாக டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!