அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  இணைந்து இதனை திறந்து வைத்தனர்.

போரின் பின்னர் மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகளை வழங்கும் மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்கள தொடர்பாடல் அதிகாரி இல்லாமையினால் மாவட்ட செயலகத்தில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதில் நீண்டகாலமாக ஊடகவியலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இதனை  தீர்க்கும் முகமாக நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க தகவல் திணைக்களத்தின் 23வது மாவட்ட அலுவலகமாக உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்  நாலங்க கலுவெவ, ஜனாதிபதி செயலக பிரதி செயலளார் றோகண அபேரத்ன, தகவல் திணைக்களத்தின் தகவல் பணிப்பாளர் எம்.ஜி.ஜெயதிஸ்ச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

மாவட்ட செயலக அரச தகவல் திணைக்கள அலுவலகத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளதை தொடர்ந்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நலக்க களுவௌ உத்தியோகபூர்வமாக கையொப்பம் இட்டு தொடங்கி வைத்தார்.

.

Recommended For You

About the Author: THAVASEELAN

error: Content is protected !!