நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் . 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு 652 செயற்திட்டங்கள் 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்திருமதி ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் தெரவித்துள்ளார்.
இன்றைய நாள் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்று மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரவித்துள்ளார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் வேலைத்திட்டங்கள் சிறப்புற முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் கடந்த 03.06.19 தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில் 05.06.19 அன்று மூன்றாம் நாள் வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்டப்டு வருகின்றது எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் நன்மையடைந்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறுபிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சி திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.
மூன்றாவது நாளான இன்று 169 வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளன 8ஆயித்தி 528 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள். இதற்காக 5.1 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. நேற்றய தின வேலைத்திட்டத்தில் 324 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ள 17 ஆயிரத்தி 479 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள். இதற்காக 43.74 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தில் மூன்றாம் நாளான இன்றுவரை 652 செயற்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள். 52.4 மில்லின் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் உத்தியோகத்தர்கள், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகைதந்வர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களில் இருந்து வருகை தந்து பணிகளை மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகூறிக்கொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.