மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது : திலகராஜ்

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை, தற்போதைய அரசாங்கத்தையே சாரும் எனவும், மலையக மக்கள் தாமாகவே முன்வந்து, தமக்கான உரிமைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா அக்கரபத்தனை டொரின்டன் தோட்டத்தில், வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்…

மக்கள் நேரடியா வீடுகளை கேட்கும் போது, அந்த பிரிவுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் பிரிவுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது, எங்களுக்கும் தாருங்கள் என்கிறார்கள் இன்று நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகளை மக்கள் தெரிந்து வைத்துக்கொண்டே எம்மிடம கேட்பது மிகவும் மகழ்ச்சியாக உள்ளது.

இதே தோட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் திறப்பு விழா வைக்கவில்லை, ஆனால் கட்டடிய நாங்கள் சொன்னால் தான் மக்களுக்கு தெரியும் இல்லாவிட்டால் அதனையும் தாங்கள் செய்ததாக கூறிவிடுவார்கள்.

அக்கரபத்தனை டொரின்டன் தொழிற்சாலைக்கு முன்னால் உள்ள லயம்  கடந்த 2014 ஆண்டு தாழிறக்கத்துக்கு  உட்பட்டது.

அதனை உடனடியாக நாங்கள் பார்வையிட்டு அந்த லயத்தில் வாழ்ந்த 24 குடும்பங்களுக்கு 24 வீடுகள் உடனடியாக கட்டிக்கொடுத்துள்ளோம்.

இன்னும் ஓரிரு மாதத்துக்குள் பக்கத்தில் உள்ள டொரின்டன் பிரிவுக்கும் 25 வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும், இன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு அமைச்சின் மூலமாகவும், இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலமாகவும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.

ஆனால் எம்.எஸ் பிரிவுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் அந்த தோட்ட முகாமையாளரால் காணி ஒதுக்கி கொடுக்காததன் காரணமாக இன்று வீடு கட்டிக்கொடுக்க முடியாது போய் உள்ளது.

இன்னொமொரு மீறிபெத்தையாக அந்த தோட்ட மாறுவதற்கு முன் நாம் அந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!