திருமலையில், சிவபூமி யாத்திரிகர் மடம் திறப்பு

 யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையும், திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையும் இணைந்து நிர்மாணித்த, திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் மடம் மற்றும் சிறுவர் மனவிருத்தி பாடசாலை, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடம் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு. திருமுருகன் மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபை செயலாளர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்வில், திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் நா.இராசநாயகம் மற்றும் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த தவத்திரு சுந்தரராசா அடிகளார், அவுஸ்திரேலிய இருதய நிபுணர் மனோ மோகன், சிவபூமி அறக்கட்டளை நிர்வாகிகள், திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு வரும் தொண்டர்கள் தங்குவதற்கு மடம் இல்லை என்று, சில முயற்சிகள் ஆலய பரிபாலனத்தினால் எடுக்கப்பட்ட நிலையிலும், அது தோல்வியில் முடியவே, சிவபூமி அறக்கட்டளையினர் தாமாக முன்வந்து, திருகோணமலையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலையும் அமைய வேண்டும் என கருதி, சிரமங்களுக்கு மத்தியில், இக் கட்டடத் தொகுதியில், நவீன வசதியுடன் தோன்றிய சிவபூமி யாத்திரிகள் மடம் மற்றும் சிறுவர் மனவிருத்தி பாடசாலை தோற்றம் பெற்று, இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளதாக, சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!