கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேசம் தரம் உயர்தப்படும் போது கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறன்பாட்டுகள் களையப்பட்டு இன ஜக்கியம் தோற்றுவிக்கப்படும் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை(14) இடமாற்றம் பெற்றுச் சென்ற திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களை திருக்கோவில் பிரதேச மக்கள் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நிதி மற்றும் காணி அதிகாரங்கள் அற்ற ஒரு பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது. இவ் உப பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது என்பது தமிழ் மக்களின் உரிமை இதனை முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்ட போதிலும் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றமை வேதனை அளிக்கின்றன.
இந்நிலையில் தற்போது இடம்பெற்ற அரசு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை சாதுரியமாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரங்களை கையாளும் வகையில் கணக்காளர் ஒருவர் திங்கட்கிழமை நியமிக்கப்படுவதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரம் கொண்ட கணக்காளர் ஒருவரை நியமிப்பற்கு முட்டுகட்டையாக முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்ந்த தமிழ் அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள் குறிப்பாக கருணா மற்றும் பிள்ளையான் பொதுபல சோன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றோர்களின் கட்சியினர் செயற்படுகின்றனர்.
அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்து வரும் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இணைந்து செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் பெரும் அடியாகவே இந்த கணக்காள நியமனம் அமைந்திருக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்து இருந்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தவிசாளர் இ.வி.கமலராஜன், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், வலயக்கல்வி அலுவலக கல்விப் பணிப்பாளர்கள்,பாடசாலை அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்பின் நிருவாகிகள், பொது மக்கள் என பெருமெண்ணிக்கையானோர் கலந்து கொண்டு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களை பாராட்டி கௌரவித்து பிரியாவிடை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.