வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரம் நிலையில், நேற்று வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று மாலை 4 மணியளவில் விசேட வசந்த மண்டப பூஜைகளை அடுத்து, வேட்டையாடுவற்காக தான்தோன்றீஸ்வரர் எழுந்தருளி அருள்புரிந்தார்.
இதன்போது நூற்றுக் கணக்கான மக்கள் வேடர்களின் வேடம்பூண்டு, வேட்டையாடும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.
வழமையாக, பெருந்திரளான மக்கள் வருகை தரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்வத்தில், இம்முறை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமைகள் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நி)