அக்குறணை சியா வைத்தியசாலையில் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அக்குறணை சியா வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட புலுகஹதென்ன பிரதேச தாய்மார்களின் நலன் கருதி 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.
தாய் சேய் மருத்துவ நிலையத்தை முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், பிராந்திய சமூகவியல் வைத்திய அதிகாரி காமனி ஜயக்கொடி, அக்குறணை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நி)