முஸ்லிம்களின் விவகாக சட்டத்தில் அத்தியாவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த யோசனை, நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம்களின்விவகாக சட்டத் திருத்த யோசனை குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
வயது எல்லை, விவாகம் செய்துகொள்ளும் பெண்ணின் இணக்கத்தை அறிதல் உள்ளிட்ட சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யும் குறைந்தபட்ச வயதெல்லையை 18 ஆக அதிகரிக்க இணங்கப்பட்டுள்ளதாகவும் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தங்களுடைய யோசனை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைவான சட்டத் திருத்தம் அவரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அமீர் அலி தெரிவித்துள்ளார்.(சே)