நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும், ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 தொடக்கம் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச்சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 கிலோ மீற்றர் தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!