மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம்!

மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கொழும்பு – கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை – கேகாலைக்கு இடையிலும் கண்டி – நுவரெலியா வீதியிலும், கம்பளை – நாவலப்பிட்டி வீதியிலும் எல்ல – வெள்ளவாய உள்ளிட்ட பகுதியிலும் இந்த அனர்த்த நிலை காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!