புதிய அரசமைப்பு உருவாக்கம் கானல்நீர் போன்றது – திஸ்ஸ விதாரண

புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது கானல்நீர் போல காட்சியளிக்கிறது பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய வகையில் குறுகிய காலத்தில் அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது சாத்தியமற்றதாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்னைக்குதீர்வு காணப்பட வேண்டும் என்பது லங்கா சமசமாஜ கட்சியின் பிரதான கோரிக்கையாக காணப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் அரசமைப்பின் 20ஆவது திருத்தம், புதிய அரசமைப்பு ஆகிய விடயங்கள் பிரதானமானவையாகக் காணப்பட்டன. அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் காட்டிய அக்கறை புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் காட்டப்படவில்லை. புதிய அரசமைப்பு தொடர்பில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது அக்குழுவின் செயல்பாடுகள், மக்களின் அபிப்பிராயத்தை கோரியமை தொடர்பில் முன்னேற்றகரமாக காணப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

புதிய அரசமைப்புக்கான மூல வரைவு இந்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவில்லை. புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீர்போல காட்சியளிக்கிறது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்குவது சாத்தியமற்றது. அரசியல் நோக்கத்திற்காக அரசமைப்பு அவசரமாக உருவாக்கப்பட்டால் அது சமூக மட்டத்தில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும். அரசமைப்பை அடிக்கடி திருத்தம் செய்யும் போது அரசமைப்பு மீதான மக்களின் பற்று மழுங்கடிக்கப்படும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!