கிழக்கு கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

கிழக்கு கடற்பரப்பில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியமையால் திருகோணமலையிலிருந்து புத்தளம் வரையான கடலோர பகுதிகளில் மீனவர்கள், கடற்படையினர் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தற்போதைய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாக்கத்தால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பாரக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 -65 கிலேமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும் காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. திடீரென பலத்த காற்று, கொந்தளிப்பான கடல், இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுவதால் கடற்றொழிலாளர்கள், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!