கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை

கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் பொது தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக கனடாவில் ஆட்சியமைக்கின்றது.
இதன்படி, கனடாவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பபடி அமைச்சரவையில் ஒன்பது புதியவர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 1990ம் ஆண்டுகளில் முன்னாள் பிரதம மந்திரி கிம் காம்ப்பெல்க்குப் பின்னர், கனடாவின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனிதா ஆனந்த் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர். கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்த இவர் தமிழகம் – வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!