உலக கோப்பை கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்க அணிகள் மோதல்.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிஇ தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. இதன்படிஇ மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிவருகிறது.

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு எதிரான தனது ஆரம்ப ஆட்டத்தில் 55 ஓட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது. இதேவேளை தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்புகள் குறைவு என்பதால் இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானதாக அமையுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!