யாழ். மாவட்டத்தில் 08 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா

யாழ். மாவட்டத்தில் 08 பேர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 125 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என யாழ்ப்பாண மாவட்டத்தில் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என முல்லைத்தீவில் 03 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!