உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணை : வத்திகான் ஆதரவு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வத்திக்கான் கார்டினல் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கடிதத்தில், வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!