கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், பல லீற்றர் கசிப்பு, கோடா மற்றும் கசிப்புத் தயாரிப்பிற்கான உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று அதிகாலை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.

இம்முற்றுகைச் சம்பவம் இன்று அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர், கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு விநியோகத்தில் ஈடுபட்டு வந்தவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களையும், சந்தேக நபரையும், விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!