வடக்கு மாகாணத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி.

வவுனியாவில் 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களில் உயிரிழந்த இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என வவுனியாவில் 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர் என யாழ்ப்பாணத்தில் 07 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!