அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் நடாத்தும் கட்டுரைப் போட்டி

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. இக்கட்டுரைப் போட்டியில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றலாம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் இன்றைய அவல நிலையும், அதில் இருந்து தீர்வை நோக்கி எனும் தலைப்பில் இக்கட்டுரைப்போட்டி இடம்பெறவுள்ளது. ஆக்கங்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியவாறும், சுமார் 1000 சொற்களுக்கு மேற்படாமலும், தட்டச்சு செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 15 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 10 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தமிழ்மொழி மூலம் மாத்திரம் இப்போட்டி நடைபெறும். கட்டுரைகளை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: கே.ஜி 7, எல்விடிகல மாடி வீடு, கொழும்பு 8 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!