சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியும், நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்கள் மீண்டும் மீண்டும் பொலிஸ் தடைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டமையால், அவர்களை கலைப்பதற்கு நீர்த் தாரை பிரோயகம் வாகனங்கள் மற்றும் இறப்பர் தோட்டக்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போராட்டத்தின் போது 9 பேரை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!