முல்லைத்தீவில் கொரோனாவால் ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் முல்லைத்தீவில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக இறந்தவரின் உடலில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே உயிரிழந்தவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் 79 வயதான பாலசிங்கம் சீதை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!