வடக்கு மாகாணத்தில் 27 பேருக்குக் கொரோனாத் தொற்று.

யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 27 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன் அடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 12 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என 17 பேர் இனங்காணப்பட்டனர்.

வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் 02 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!