மட்டக்களப்பில் விலங்குகளுக்கு தடுப்பூசி!

சுகாதார அமைச்சு மற்றும் பொது சுகாதார மிருக வைத்திய சேவையும் இணைந்து விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிராந்திய நீர்வெறுப்பு நோய் கட்டுப்பாடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட கல்லடி பொதுசுகாதார பிரிவுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும்
பூனைகளுக்கான விசர் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!