வயோதிபப் பெண் படுகொலை; : 25,000 ரூபாய் பணம் கொள்ளை

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த நபரொருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில், இராஜகிரிய வீதியைச் சேர்ந்த 71 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் வெலிக்கடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!