இலங்கை – பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி ஒக்டோபரில்!

பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்குட்பட்ட பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 05 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. உயிர்க்குமிழி முறைமையின் கீழ் இந்த ஆட்டம் இடம்பெறவுள்ளது.

நடைபெறவிருக்கும் போட்டித் தொடரானது இலங்கை பத்தொன்பது வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, 2022 யு-19 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கான சிறந்த வீரர்களைக் கண்டறிவதற்கு தமக்கு உதவியாக அமையும் எனவும் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணியின் தலைவர் அவிஸ்க குணவர்தன கூறியுள்ளார்.

2022 இல் நடைபெறவுள்ள யு-19 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவிஸ்க குணவர்தனவும், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தனவும், சுழல் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக சசித் பத்திரணவும், வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக சாமில கமகேயும், துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக தம்மிக சுதர்சன ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!