தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், 551 பேர் கைது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் 551 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 37 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்று காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை 295 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி 895 வாகனங்களில் பயணித்த 1388 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75,058ஆக உயர்வடைந்துள்ளது.

மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் வெளியேறும் 13 பிரதேசங்களில் 117 பொலிஸார், 92 இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி பயணித்தக் குற்றச்சாட்டில் 292 வாகனங்களில் வந்த 164 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 13 பிரதேசங்களில் 117 பொலிஸார், 92 இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!