கொவிட் தடுப்பூசித்திட்டத்தின் மூலம் இலங்கையை சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை

கோவிட் தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றி மூலம், இலங்கை மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜதந்திர மட்டக் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, கனடா, ஸ்பெயின், சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இலங்கைக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!