கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலில் மூவர் காயம்

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில், மூவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் கடற்படையினரின் உதவியுடன் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், மாலுமி ஒருவரும் மீனவர்கள் இருவருமே காயமடைந்துள்ளனர்.

சுமார் 200 கடல் மைல் தொலைவில் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வேறு படகொன்றில் தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரியவருகிறது. காயமடைந்த மீனவர்கள், கடலோர பாதுகாப்புப்படை திணைக்களத்தின் படகின் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதன் பின்பு கடற்படையின் ​​டோரா கப்பலின் மூலம் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!