14 ஆவது ஐ.பி.எல் சீசன் இன்று: சென்னை, மும்பை மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்ட இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகிறது. இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 04 பிளே ஒஃப் போட்டிகள் உள்ளடங்கலாக 31 ஆட்டங்கள் துபாய், ஸார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளன.

இந்த சீசனில் நடைபெற்ற போட்டி முடிவுகளினடிப்படையில் டெல்லி கபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 02வது இடத்திலும் றோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூர் 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் 08 புள்ளிகளுடன் 04 ஆம் இடத்திலும் ராஜஸ்தான் றோயல்ஸ் 06 புள்ளிகளுடன் 05 ஆம் இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் 06 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் கொல்கத்தா நைற் றைடர்ஸ் 04 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும் சன்றைசஸ் ஹைதராபாத் 02 புள்ளிகளுடன் 08ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!