ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : ஐவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு, அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் தலிபான்கள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!