யாழ். மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கில் 49 பேருக்குத் தொற்று

யாழ்.மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கிளிநொச்சியில் உயிரிழந்த இருவர், யாழ். மாவட்டத்தில் உயிரிழந்த 02 பேர் என நான்கு பேர் உள்ளடங்குவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர், யாழ்.சிறைச்சாலையில் 08 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என யாழ்.மாவட்டத்தில் 27 பேர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர் என வவுனியா மாவட்டத்தில் 09 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணை முத்துலிங்கம் என்ற 91 வயது நபரும், சாவகச்சேரியை சேர்ந்த 41 வயதுடைய சந்திரகாசன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னையா கணபதிப்பிள்ளை என்ற 63 வயது நபரும், கறுப்பையா ஆறுமுகம் என்ற 82 வயது நபரும் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!