மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் பருவபெயர்ச்சி மழைபெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீடு வீடாக டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையிலும்ஷ தற்போது டெங்கு நோய் தாக்கமும் ஏற்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வீடு வீடுடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது வீடுகளின் வளாகத்தில் தேங்கிக் காணப்படும் கழிவு குப்பைகள் என்பன ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் ஒலிபெருக்கி மூலம் தெளிவூட்டப்பட்டது. வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!