நாளை இந்த இடங்களில் மோட்டார் வாகனங்கள் செலுத்த முடியாது!!

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்த மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு நகர சபை இணைந்து மேற்கொள்ளும் “CAR FREE ZONE” என்ற மோட்டார் வாகனம் அற்ற தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்விற்காக இவ்வாற போக்கவரத்து மட்டுப்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கிரீன்பாத் வீதி, கன்னங்கரா மாவத்தை, மெட்லேன்ட் கிரசன்ட், ஶ்ரீலங்கா பதனம் மாவத்தை மற்றும் மாகஸ் பெர்ணான்டோ மாவத்தை ஆகிய பகுதிகளில் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதிகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் மற்று வழிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!