வவுனியாவில் தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் உட்பட 08 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

வவுனியாவில் தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்களில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் இருவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றயவர் வவுனியா பாரதிபுரம் பகுதியில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் இருவர் வவுனியா முதியோர் காப்பகம் மற்றும் அவர்களது வீடுகளில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!