மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளும், பாடசாலைகளுக்கு கணினிகளும் கையளிப்பு

அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளும் வளம் குறைந்த பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் யாழ். குடத்தை கரையூர் அ.த.க.பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும், சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளும் வழங்கப்பட்டன. கொவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் கலந்து கொணடார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!