காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைவஸ்துடன் ஆறு பேரும் பிடியாணையில் ஒருவரும் கட்டுத்துவக்குடன் ஒருவருமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கைதான 3 பேரிடம் தலா 90 மில்லி கிராமும், மற்றுமொருவரிடம் 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருவர் கஞ்சா சுருட்டு பாவனைக்காக வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட உள்ளூர் கட்டுத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியை கொண்டு சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

ஆரையம்பதி சந்தியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கட்டுத்துவக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த எட்டு சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்; செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் அதிபர் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழ்காட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.கஜநாயக்க தலைமையில் காத்தான்குடி விஷேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!