களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில், கடந்த 05 தினங்களில், 209 பேருக்கு கொரோனா!!

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் கடந்த ஐந்து தினங்களில் 209 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

இன்று களுவாஞ்சிகுடி சுகாதாரப் பணிமனையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள், ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த தொற்றாளர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பிராந்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!