இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தவர்கள் அனைவரும் எத்தகைய பிளவுகளும் பிரிவினைகளுமின்றி தத்தமது சமயப் போதகர்களின் வழிகாட்டலுக்கு இணங்க புரிந்துணர்டனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று அக்குறணை வீகல விஹாராதிபதி சுமனஜோதி தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்குறணை சமாதானக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் கலாசார ‘நல்லிணக்கதிற்கான அழைப்பு’ என்ற தொனிப் பொருளில் அரபுக் கல்லூரிகளில் நடைபெறும் கல்வி மற்றும் கல்வி விடயங்கள் தொடர்பில் தெளிவுட்டும் வகையில் திறந்த அரபு மத்ரஸா என்னும் நிகழ்வு அக்குறணை ரஹ்மானிய்யா அரபுக் கல்லூhயில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமனஜோதி தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்குறணை பிரதேசத்தில் தேசிய சக வாழ்வையும் ஒற்றுமையையும் கட்டி எழுப்பு வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்திற்கு நாம் விசேடமாக கவனத்திற் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்குறணை பிரதேசத்தில் உள்ள பிரதான விஹாராதிபதி என்ற வகையில் முஸ்லிம் மக்கள் செய்த நல்ல செயற்பாட்டையும் சகவாழ்வை மேலும் கட்டி எழுப்புவதற்காக எடுத்த முயற்சியையும் பாராட்டனார்.
முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அரபு கல்லூரி என்றால் என்ன என்பது குறித்து தமக்கு தெட்டத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளதாக கூறினார். (நி)