தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை புறக்கணிப்பது சரியில்லை’

தேர்தல், அரசியலை நோக்காகக்கொண்டு, குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசாங்கம் புறக்கணித்து விடக்கூடாது என, தமிழர் செயலணியின் ஊடகப்பேச்சாளர் யதீந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில், இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை, முஸ்லிம் தலைமைகள் புறக்கணிப்பது தவறெனத் தெரிவித்ததோடு, ஐ.எஸ் அமைப்பினர், இலங்கையைத் தெரிவு செய்யவில்லையென்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களே, ஐ.எஸ் அமைப்பைத் தெரிவு செய்துள்ளனர் என்றும் கூறினார்.

எனவே, இதன் பின்னரும் முஸ்லிம் இளைஞர்கள், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டியது, முஸ்லிம் சமூகத்தின் கடமையென்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில், தமிழ் அரசியல் தலைமைகள் நழுவல் போக்குடன் செயற்படுவதாகத் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு, தமிழ்த் தலைமைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தலை மய்யமாகக்கொண்டு, தாக்குதல்களுடன் சம்பந்தமுடையவர்களைப் பாதுகாக்க, அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Webadmin

error: Content is protected !!