பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி தங்கநகை திருட்டில் ஈடுபட்ட 24 வயது பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகத்தளப்புத்தகத்தினூடாக சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேக நபர், அந்த யுவதியின் வீட்டுக்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளதுடன் இரண்டு தடவைகளுயும் யுவதியின் வீட்டிலிருந்த நகைகளை திருடியுள்ளார் என்று தெரியவருகிறது.

கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் யுவதியின் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர், சுமார் 3 1/2 பவுன் தங்க நகையை திருடியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!