நாவுல பிரதேச செயலகம் மூடப்பட்டது.

நாவுல பிரதேச செயலகத்தில் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பிரதேச செயலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச செயலாளர் சிந்தக்க இலங்க சிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை தேர்தல் காரியாலயத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் ஒருவர் அரச அலுவலுக்காக பணிக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பைப் பேணிய மூன்று கிராமசேவகர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாவுல பிரதேச செயலகத்துக்கு வருவதைத் தற்காலிகமாக தவிர்த்துக்கொள்ளுமாறு, பிரதேச செயலாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!