அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (1) காலை 8.30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்ட்ராசெனெகா இரண்டாவதுத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு 24 மணித்தியாலமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு வாரத்துக்கு இந்தத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை வைத்தியசாலை, அத்துருகிரிய வைத்தியசாலை, நவகமுவ வைத்தியசாலை, பிலியந்தல, அவிஸ்ஸாவளை, ஹோமகம, கொஸ்கம (சாலவ), தலங்கம, பாதுக்க, அங்கொட, களுபோவில வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பத்தரமுல்ல, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன, கோத்தட்டுவ, ஹங்வெல்ல, கடுவளை, கஹத்துடுவ, கெஸ்பேவ, கொலன்னாவ, மஹரகம, மொரட்டுவை, நுகேகொட, பாதுக்க, பிலியந்தல, புறக்கோட்டை, ரத்மலான ஆகிய சுகாதார பிரிவுகளிலும் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயண, நாராஹேன்பிட்டியவிலுள்ள இராணுவ வைத்தியசாலை, வெரஹெர இராணுவ முகாம், பனாகொட போதிராஜாராமய, கொழும்பு மாநகரசபை பிரிவு, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானம், சுகததாச விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களிலும் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில், வத்துப்பிட்டிய வைத்தியசாலைய, பியகம, திவுலப்பிட்டிய, தொம்பே மற்றும் ரதாவன வைத்தியசாலை, கம்பஹா, ஜாஎல, நீர்கொழும்பு, கிரிபத்கொட, உடுபில, மல்வத்துஹிரிபிட்டிய, மினுவாங்கொட, மீரிகம, ராகம, விஜயகுமராதுங்க, பமுனுகம ஆகிய வைத்தியசாலைகளில் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

இதேவேளை, கம்ஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய, தொம்பே, கம்பஹா, ஜாஎல, கட்டான, களனிய, மஹர, மினுவாங்கொட, மீரிகம, நீர்கொழும்பு, மத்துகம ஆகிய பொதுசுகாதார பிரிவுகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை பிம்புர ஆரம்பப் பாடசாலை, தலகல மங்களராம விகாரை, மஹாமாயா வித்தியாலயம், போப்பிட்டிய சனச காரியாலயம் ஆகியவற்றிலும் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!