பியகம பொதுசுகாதார பிரிவில் பல்வேறு கொரோனா கொத்தணிகள்

பியகம பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா கொத்தணிகள் பல உருவாகியுள்ளன என்று, பியகம பொதுசுகாதார பரிசோதகர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

பியகம பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட கோணவல, கடவத்த, ஹெய்யன்துடுவ ஆகிய பகுதிகளில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற மூன்று திருமண நிகழ்வுகளில் மணப்பெண் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தெல்கொட கதுபொட பிரதேசத்தில் பிரிவெனா ஒன்றில் விகாராதிபதி, சிறிய தேரர்கள் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பட்டிவில பிரதேசத்தில் இடம்பெற்ற தான வீடொன்றில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!