போதைப் பொருள் சுற்றிவளைப்பில் 45 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 45 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை பண்டாரகம நீதிமன்றில் ஆஜர்படுத்தி நான்கு தினங்களுக்கு பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சுமார் 6 கோடி ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்ட பெண்ணொருவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அங்குலான பொலிஸ் பிரிவில் அங்குலான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 5 கிராம் ஹெரோய்னுடன் 35வயது பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் 19 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோன்று குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கை சோதனையிட்டபோது 10 இலட்சம் ரூபாய், 20 இலட்சம் ரூபாய் என தினமும் பில்லியன் கணக்கிலான பணம் அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுவது தெரியவந்துள்ளது.

இந்தப் பணம் ஹெரோய்ன் வியாபாரத்தினூடாக பெற்றுக்கொண்ட பணம் என்று தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை இன்று(31) மொரட்டுவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நாட்டிலிருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தலைமறைவாகியுள்ள தர்மசிறி என்பவருக்கூடாகவே இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அங்குலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் பண்டாரகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவோரை கைதுசெய்வதற்காக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பொலிஸ் பிரிவினர் உள்ளடங்களாக விசேட குழுவொன்று இவ்விடயத்துக்காக அமைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!