விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன மரணம்!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹயாசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த வாகனம் நேற்றிரவு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!